*ஆவணப்படம் - A tribute to Venmurasu *
அன்புள்ளம் கொண்ட தமிழ் சொந்தங்களுக்கு,
உலக மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களில், மிகப்பெரும் நாவலாக வடிவெடுத்து நிற்கிறது தமிழ் நாவலான வெண்முரசு! நாம் வாழும் காலத்தில் தமிழில் நிகழ்ந்திருக்கும் இந்த பிரம்மாண்டமான சாதனையை கொண்டாடும் விதமாக 'வெண்முரசு கொண்டாட்டம்’ ஆவணப்படம் அட்லாண்டாவில் திரையிடப்படவுள்ளது. ஆவணப்படம் வரும் ஜூன் 12-ம் தேதி, பிற்பகல் 2.30 மணிக்கு, The Springs Cinema & Taphouse திரையரங்கில் திரையிடப்படும்.
பிரபல எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஒன்று கூடி இலக்கிய உலகின் பெருஞ்சாதனையான வெண்முரசு வெற்றிகரமாக நிறைவடைந்ததைக் கொண்டாடுகிறார்கள். இது ஏன் ஒரு வரலாற்று தருணம் என்றும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இப்பெரும் இலக்கிய நிகழ்வில் பங்கு பெற, அட்லாண்டா மற்றும் அருகாமை நகரங்களில் வசிக்கும் அனைத்து தமிழ் சொந்தங்களையும் வருக வருக என்று வரவேற்கிறோம்.
திரையிடலில் பங்குபெறுபவர்கள் அரசாங்க, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் திரைஅரங்கத்தின் வழிகாட்டுதலை பின்பற்ற அறிவுறுத்தபடுகிறார்கள். திரைஅரங்க விதிமுறைகளின் படி திரையரங்கில் 80 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
Ideal for 12 years or older
வெண்முரசை பற்றி மேலும் அறிந்து கொள்ள: https://en.m.wikipedia.org/wiki/Venmurasu
வெண்முரசை ஆன்லைனில் படிக்க: https://venmurasu.in/
Discussion
By posting you agree to the Terms and Privacy Policy.